‘Love’ changed my life completely - Bharath
இயக்குனர் ஷங்கர் தயாரித்த முதல் படம் காதல். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்த இப்படத்தில் பரத், சந்தியா இருவரும் காதல் ஜோடிகளாக நடித்திருந்தனர்.
இப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்து படத்தின் நாயகன் பரத், டுவிட்டரில், “16 வருடங்களுக்கு முன்பு. டிசம்பர் 17, 2004 எனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய நாள். எனது திரையுலக பயணத்தில் ‘காதல்’ ஒரு மைல்கல். ஐஸ்வர்யா மற்றும் முருகன் அப்போதும், இப்போதும்” எனக் குறிப்பிட்டு, சமீபத்தில் சந்தியாவை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை பரத் பகிர்ந்துள்ளார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…