ஆக்ஷனில் மிரட்டும் லோகேஷ் கனகராஜின் ‘DC’ டிரெய்லர்!

‘மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ போன்ற வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக திகழும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ‘DC’ என பெயரிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தில் லோகேஷ் ‘தேவதாஸ்’ கதாபாத்திரத்திலும், வாமிகா ‘சந்திரா’வாகவும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ‘பிளடி வாலண்டைன்’ ப்ரோமோ ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் முழுக்க முழுக்க அதிரடி மற்றும் வன்முறை காட்சிகளால் நிரம்பியுள்ளது. அருண் மாதேஸ்வரனின் ஸ்டைலில் உருவாகியுள்ள இப்படம், ‘சாணி காயிதம்’ போலவே ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் உலகத்தை காட்டுகிறது.

கடுமையான ஆக்ஷன், டார்க் விஷுவல்ஸ், அனிருத்தின் பின்னணி இசை ஆகியவை இணைந்து டிரெய்லருக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. “டிசி” திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என டிரெய்லர் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Suresh

Recent Posts

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

8 hours ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

9 hours ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

9 hours ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

9 hours ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

10 hours ago

நடிகையுடன் கோவிந்தாவின் நெருக்கம்… விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற மனைவி!

பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…

10 hours ago