lgm-movie-latest-update
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியுடன் இணைந்து புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக தமிழில் “லெட்ஸ் கெட் மேரிட் (LGM)” என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருக்கிறார். இதில் கதாநாயகனாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்படத்தின் கதாநாயகி இவானா நடித்திருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல்கள், ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி LGM திரைப்படத்தில் தல தோனி அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தோனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…