leo-movie-promo-views-update
தளபதி விஜய் அவர்கள் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 67ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டைட்டில் நேற்றைய தினம் தரமான புரோமோவுடன் வெளியானது. அதில் இப்படத்திற்கான தலைப்பு “லியோ” என்று வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ப்ரோமோவில் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழு தெரிவித்திருந்தது.
இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து வரும் நிலையில் இந்த வீடியோ இதுவரை கடந்திருக்கும் பார்வையாளர்கள் குறித்த புதிய தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், ‘லியோ’ ப்ரோமோ வீடியோ 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக பதிவிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…