leo-collected-more-than-400-crores
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் ரிலீசுக்கு முன்பாகவே 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
எந்தெந்த பிசினஸ் மூலம் எவ்வளவு வசூல் கிடைத்தது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
தமிழக ரிலீஸ் உரிமை – 90 கோடி
வெளிநாட்டு உரிமை – ரூ. 55 கோடி
கேரளா உரிமை – ரூ. 15 கோடி
ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமை – ரூ. 20 கோடி
கர்நாடகா – ரூ. 12 கோடி
ஹிந்தி சாட்டிலைட் உரிமை – ரூ. 22 கோடி
ஹிந்தி திரையரங்க உரிமை – ரூ. 10 கோடி
ஆடியோ உரிமை – ரூ. 15 கோடி
சாட்டிலைட் உரிமை – ரூ. 70 கோடி [சன் டிவி]
டிஜிட்டல் உரிமை – ரூ. 125 கோடி [நெட்பிளிக்ஸ்]
இப்படி மொத்தமாக ரூபாய் 434 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விஜயின் திரைப்படத்தில் மிகப்பெரிய பிசினஸ் செய்யப்பட்ட திரைப்படமாக லியோ இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…