“என்றென்றும் நம் நினைவில் வாழும் சிவாஜி கணேசன் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி”: லெஜென்ட் சரவணன் ட்வீட்

“கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.வளர்ந்து வரும் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் ‘லெஜண்ட்’ சரவணன் கலந்து கொண்டார்.

மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில், \”என்றென்றும் நம் நினைவில் வாழும் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\” என்று பதிவிட்டுள்ளார்.

jothika lakshu

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

17 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

17 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

20 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

20 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

20 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

21 hours ago