lal-salam-film-crew-for-causing-disturbance-to-the-public
தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான இவர் தனது முன்னாள் கணவரான தனுஷின் 3 படத்தின் மூலம் அனைவருக்கும் இயக்குனராக பரிச்சயமானார். அதன் பிறகு ஒரு சில படங்களை இயக்கிய இவர் தனுஷை விவாகரத்து செய்த பிறகு லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தும் சிறப்பு வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் தொடங்கியை இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக திருவண்ணாமலையில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அந்த இடத்தில் படப்பிடிப்பை காண திரண்டு வந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் படம் பிடித்துள்ளனர். இதனை அறிந்த தனியார் பாதுகாவலர்கள்பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளனர். மேலும் பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…