Laabam film release date announcement
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லாபம் படம் வருகிற ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…
நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின்…
சிலந்தி 2 படத்தின் மூலம் இயக்குநர் ஆதிராஜன் மற்றும் நடிகை மாளவிகா மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது. 2008ஆம் ஆண்டு…
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கிய ‘பாலன்: தி பாய்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Manjummel Boys படத்தின்…
பரத்காந்த் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக…
Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | Sai Abhyankkar | Dream…