குடிமகான் திரை விமர்சனம்

வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வேலை செய்து வருகிறார் நாயகன் விஜய் சிவன். இவர் மனைவி சாந்தினி, தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். விஜய் சிவன் குளிர்பானம் குடித்தாலே போதை ஏறும் விநோத நோயில் சிக்குகிறார். ஒரு நாள் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும்போது தானாகவே போதை ஏறி மெஷினில் நூறு ரூபாய் வைப்பதற்கு பதிலாக ஐநூறு ரூபாய் நோட்டுகளை வைத்து விடுகிறார். அந்த பணம் வாடிக்கையாளர்கள் கைக்கு போய்விடுகிறது.

இதனால் விஜய் சிவன் வேலை பறிபோகிறது. இழந்த வேலையில் மீண்டும் சேர பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களை தேடி அலைகிறார். இறுதியில் விஜய் சிவனுக்கு பணம் கிடைத்ததா? மீண்டும் வேலையில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. விஜய்சிவன் அப்பாவியான குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் யதார்த்தம் மீறாமல் இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார். மது குடிக்காமலேயே போதை ஏறி அவர் செய்யும் அலப்பறைகள் ரகளை. மனைவியிடம் பம்முவது, குழந்தையிடம் பாசம் காட்டுவது.

வாடிக்கையாளர்கள் வீடுகளில் ஏறி இறங்கி ஏ.டி.எம்.மில் எடுத்த பணத்தை திருப்பி தருமாறு கெஞ்சுவது என்று எல்லா இடத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சாந்தினி குடும்ப தலைவி வேடத்தில் உணர்ச்சிகளை மொத்தமாக கொட்டி கலக்கி இருக்கிறார். குடிகார தாத்தாவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி பேரக்குழந்தையுடன் டான்ஸ் ஆடுவதும், இரண்டாம் திருமணம் செய்வது என அமர்க்களம் பண்ணியிருக்கிறார்.

குடிமகன்களுக்காக குரல் கொடுக்கும் கேரக்டரில் நாமோ நாராயணன் வழக்கம்போல் எகத்தாள நடிப்பில் அதக்களம் பண்ணும்போது தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது. ஜி.ஆர்.கதிரவன், கே.பி.ஒய் ஆனஸ்ட்ராஜ் ஆகியோரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள். நாயகனின் விநோத நோயை மையமாக வைத்து குடும்பமாக பார்த்து ரசிக்கும் வகையில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கலகலப்பான படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரகாஷ். பல இடங்களில் சிரிக்க வைத்து சில இடங்களில் சிரிக்க வைக்காமல் திரைக்கதை அமைத்து இருக்கிறார்.

குடியால் ஏற்படும் பாதிப்புகளையும் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். தனுஜ் மேனன் இசையில் ‘கொக்கு கொக்கு பற பற’ பாடல் துள்ளல் ரகம். மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு படத்தை சுவாரசியப்படுத்த உதவி.

kudimahaan movie review
jothika lakshu

Recent Posts

லைஃப்ல நம்மளுக்கும் ஒரு பாயிண்ட் வரும்.. அப்போ உலகமே நம்மளை வேடிக்கை பார்க்கும்.. மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ்…

3 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட அருணாச்சலம்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

தனுஷ் 56 படத்தின் கதைகளும் குறித்து தகவலை பகிர்ந்த மாரி செல்வராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

7 hours ago

எங்க அப்பாவை பார்த்து இதுதான் சக்சஸா என்று கேட்டேன்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு.!!

வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

7 hours ago

கிருஷுக்கு வந்த காய்ச்சல்.. ரோகினிக்கு உதவிய சிந்தாமணி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த…

10 hours ago

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

1 day ago