நாயகியாக களமிறங்கும் கோவை சரளா

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘முந்தானை முடிச்சு’ ‘வைதேகி காத்திருந்தாள்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் கமல்ஹாசன் நடித்த ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்நிலையில் மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக கோவை சரளா நடிக்கவுள்ளார். பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு, நீதி வாங்கித்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரபு சாலமன், தனது வழக்கமான படங்கள் போன்று முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

1 day ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

1 day ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

2 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

2 days ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

2 days ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

2 days ago