khushi-movie-sensor-update
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் இவரது நடிப்பில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி “குஷி” திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. விஜய் தேவர்கொண்ட கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து குஷி திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, குஷி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனை விஜய் தேவர் கொண்ட அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டருடன் பதிவிட்டு தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’…
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தின் இரண்டாம்…
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. சரவணன், வரலட்சுமி சரத்குமார், கவிதா பாரதி, வெற்றி,…
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின்…
‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், சுஷின் ஷியாம் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம்…
Ravana Tandavam Song | Ramayana | Ranbir, Yash | Namit M, Nitesh T | AR…