`KGF Chapter 2` to have a new release date`KGF Chapter 2` to have a new release date
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ‘கேஜிஎப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாததால், படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்று எதிர்பார்ப்புகள் கிளம்பி இருந்தது.
இந்த நிலையில், புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குநர் பிரஷாந்த் நீல் அறிவித்திருக்கிறார். அவர், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘தியேட்டர்களில் கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும்போதுதான் மான்ஸ்டர் வருவார். அவர் வரும் புதிய தேதியை விரைவில் அறிவிப்போம்’ என்று அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…