விரைவில் வெளியாக இருக்கும் கே ஜி எஃப் 3.. படக்குழு அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்..

யாஷ் நடிப்பில் உலகமுழுவதும் வெளியாகி இருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு பிறகு தற்போது அதன் பாகம் 3 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருக்கின்றனர். கே.ஜி.எஃப் 2ம் பாகம் படத்தின் இறுதியில் பாகம் 3ன் அறிவிப்பை படக்குழு அறிவித்திருந்தனர். கே.ஜி.எஃப் 2 வெற்றியில் மூழ்கியிருந்த ரசிகர்கள் அதிலிருந்து மீள்வதற்குள் இந்த அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு அதன் அடுத்த பாகத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

KGF 3 Latest Update
jothika lakshu

Recent Posts

Ameera Official Teaser

Ameera Official Teaser | Senthamizhan Seeman | RK Suresh | Anu Sithara | MS Bhaskar

4 hours ago

‘ஓம்’ பட விழாவில் அரசியல் பேசினாரா தனுஷ்? ரசிகர்கள் மத்தியில் சொன்ன கருத்து!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

1 day ago

மீண்டும் சண்டியர் ஆக வருகிறார் கமல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

1 day ago

மீண்டும் நடிக்க வருகிறாரா முதலமைச்சர் விஜய்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி,…

1 day ago

ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம்… தனுஷ் வெளியிட்ட உருக்கமான பதிவு!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

1 day ago

சீன் திரை விமர்சனம்

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனத் தொடர்ந்து இரண்டு படங்கள்…

1 day ago