Keerthi Suresh in Hindi movie remake
கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியான படம் ‘மிமி’. இது கடந்த 2011-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘மலா அய் ஹய்ச்சி’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். லக்ஷ்மண் உடேகர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. கீர்த்தி சனோன் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன.
இந்நிலையில், மிமி படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மொழிகளிலுமே கீர்த்தி சனோன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…