தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இயக்குனராக மட்டுமல்லாமல் கார்த்திக் சுப்பராஜ் புரோடக்சன் மற்றும் ஸ்டோன் பென்ச் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் நடத்தி வருகிறார்.
தற்போது இவரது தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் என்பவரின் இயக்கத்தில் பெண் குயின் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படம் நாளை (ஜூன் 19) அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக கார்த்திக் சுப்பராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பேசியுள்ளார். வேட்ட படத்தை இயக்கும் போது அதன் இரண்டாம் பாகம் பற்றி எந்தவித யோசனையும் இல்லை.
படம் ரிலீஸான பிறகு ரசிகர்கள் பேட்டை 2 படம் பற்றி கேட்டு வந்தனர். சில ரசிகர்கள் அது பற்றிய கதைகளையும் அனுப்பி வந்தனர்.
ஆனால் தற்போதைக்கு அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் யோசனை இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் நடக்கலாம் என கூறியுள்ளார்.
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் நடிகர் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படம் கொரோனா வைரஸ் பரமன் காரணமாக தள்ளிப் போய் வருகிறது.
மேலும் விக்ரமையும் அவரது மகன் துருவ்வையும் வைத்து சியான் 60 என்ற படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…