Karthi to form alliance with Suriya again
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்திருந்தது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்தையும் சூர்யா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கார்த்தி தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ மற்றும் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர், முத்தையா இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…