karthi acted in fifteen getap in sardar movie update
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரைக்குவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் “சர்தார்”. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்துடன் இணைந்து வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல், டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் மத்தியில் இப்படத்தின் மீதுள்ள ஆர்வத்தை அதிக செய்திருக்கும் நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் கார்த்தி 15 கெட்டப்பில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இப்படத்தின் ட்ரெய்லரில் ஒரு சில கேரக்டர்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சர்தார் படத்தில் கார்த்தியின் கெட்டப் குறித்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…