kantara-movie-ott-release details
கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த திரைப்படம் தான் காந்தாரா. விஜய் கிராகந்தூர் தயாரிப்பில் பி. அஜெனீஷ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் ரிஷப் செட்டியுடன் இணைந்து கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் நடிகை சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் கன்னட மொழியில் மட்டும் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் கன்னட மொழியில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் காந்தாரா திரைப்படம் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரிவபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…