விரைவில் தொடங்க இருக்கும் காந்தாரா 2.. எப்போது தெரியுமா?

கன்னட திரை உலகில் பிரபல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்திருந்தது.

முதலில் கன்னட திரைப்படமாக வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் புதிய அப்டேட்டாக, இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி விரைவில் முடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு பணிகளை வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படம் ரிஷப் ஷெட்டி முன்பே கூறியிருந்தது போல் காந்தாரா படத்தின் முன்கதையை (prequel) அடிப்படையாகக் கொண்டு உருவாக்க இருப்பதாக படக்குழு கூறியுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

kantara-2-movie-shooting-update
jothika lakshu

Recent Posts

சாட்சி சொன்ன கறிக்கடைக்காரர் மணி.. ஆதாரத்துடன் சிக்க வைத்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட்டில்…

23 minutes ago

Oh Butterfly – Teaser

https://youtu.be/FUclfG9Pnlo?si=N9kuqZj8f7d2vZzg

7 hours ago

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…

17 hours ago

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ்

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…

17 hours ago

‘3 வித காதலை சொல்​லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..!

'3 வித காதலை சொல்​லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…

17 hours ago

”த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்” – இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்!

''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…

17 hours ago