இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் இருக்கும் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இதை குறித்து கங்கனா ரணவத் நேரடியாகவே பாலிவவுட் பிரபலங்களை பெயர் சொல்லி குற்றம் சாட்டி வருகிறார். இதனால் சுஷாந்த் தற்கொலை வழக்கில் முன்னணி நடிகை கங்கனாவும் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது குளுமனாலி பகுதியில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நடிகை கங்கனா அங்குள்ள வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வீட்டின் மீது கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், 2 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாகவும், தன்னை மிரட்டுவதற்காகவே சிலர் இப்படி செய்துள்ளதாகவும் நடிகை கங்கனா புகார் கூறியுள்ளார் கங்கனா.
இதுகுறித்து நடிகை கங்கனா விரிவாக கூறியுள்ளார் :
சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மகன் குறித்து கருத்து தெரிவித்து இருந்தேன். அதற்கான மிரட்டல் தான் இது. இனி பேசாதே என்பதற்கான எச்சரிக்கை தான் இது.
நான் இப்போது மும்பையில் இல்லை என்பதால், குளுமணாலியில் இந்த மிரட்டலை விடுத்திருக்கிறார்கள்.
சுஷாந்த் சிங் கூட இப்படித்தான் மிரட்டப்பட்டு பயந்திருக்க வேண்டும். யார் எப்படி என்னை மிரட்டினாலும் சரி, தொடர்ந்து கேள்விகளை நான் கேட்டுக்கொண்டே தான் இருப்பேன் என கூறியுள்ளார்.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…