Kangana Ranaut movie issue
விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தலைவி’. இந்தப் படம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சில நாட்களுக்கு முன்பு, ஐதராபாத்தில் சில முக்கிய காட்சிகளை படமாக்கியது படக்குழு. இதனை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தி இருந்தார்.
இதில் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசும் சில முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். இந்நிலையில் ஜெயலலிதா பேரணி செல்வது போன்ற காட்சிகளை பிரம்மாண்டமான முறையில் சென்னையில் படமாக்க திட்டமிட்டிருந்தது படக்குழு.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைவான நபர்களே படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அந்த காட்சியை கிராபிக்ஸ் மூலம் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தை வைத்து படமாக்க இன்னும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டுமென்பதால் படக்குழுவினர் அந்த காட்சியை கிராபிக்ஸ் மூலம் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…