kamalhaasan-new-insta-post
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் பலமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் இப்படம் குறித்து வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், ‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். மேலும் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் அன்பளிப்பாகவும் வழங்கி இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…