Kamal is getting ready with ‘Indian 2’ shooting soon ....
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை இதன் படப்பிடிப்பு சுமூகமாக நடந்து வந்தது.
பிப்ரவரி மாதம் 19-ந் தேதி படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கப்படவில்லை.
இடையே இப்படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் பரவி வந்தன. ஆனால் இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்தது. இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஜனவரி (2021) மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் கமல்ஹாசன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவார் என கூறப்படுகிறது.
மேலும் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருவதால், ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளாராம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…