‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ – கமல் உருக்கம்

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் இன்று காலமானார். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜூ மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்தில் ‘உன்னைக் காணாத நான்’ என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி பலரின் பாரட்டுக்களை பெற்றவர். இவருடைய மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ என்று பதிவிட்டு அந்த பாடலுக்கு நடனம் அமைக்கும் பொழுது அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை பிர்ஜூ மகாராஜ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

6 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

7 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

7 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

8 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

8 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

8 hours ago