சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் வினோத்.. வாழ்த்து தெரிவித்த கமல்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் எச்.வினோத் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கினார். இதில், ‘துணிவு’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய மையில் கல்லாக அமைந்தது. தற்போது கமல்ஹாசனின் 233-வது படத்தை இவர் இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இப்படி குறுகிய காலத்திலேயே திரைத்துறையில் தன் பெயரை நிலைநாட்டிய இயக்குனர் எச்.வினோத் இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் எச். வினோத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி எச்.வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

Suresh

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

24 hours ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

24 hours ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

1 day ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

2 days ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

2 days ago