Kamal Haasan join the ‘Indian 2’ issues
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி இருந்தது. இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதால், அடுத்த பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
இதனால் அதிருப்தியடைந்த, இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தங்கள் படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்றமோ, இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், நடிகர் கமல் இந்தியன் 2 பஞ்சாயத்தில் இறங்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய இரு தரப்பினரும் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து, படத்தை மீண்டும் ஆரம்பித்து முடித்து வைக்க வேண்டும் என நடிகர் கமல் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. கமல் தலையிட்டுள்ளதால் விரைவில் ‘இந்தியன் 2’ விவகாரம் முடிவுக்கு வரும் என்று சொல்கிறார்கள்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…