“அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது”- ‘வா வாத்தியார்’ பட விழாவில் கார்த்தி

“அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது”- ‘வா வாத்தியார்’ பட விழாவில் கார்த்தி

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், சில்பாமஞ்சுநாத், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். இது குறித்து படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கார்த்தி தெரிவிக்கையில், ‘நலன் குமாரசாமியுடன் பணிபுரிந்தது சுவாரஸ்யமாக இருந்தது. அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் வேற லெவலில் இருந்தது. ‘வா வாத்தியார்’ படத்தின் கதையை கேட்டதும் நம்மால் செய்ய முடியுமா என்று யோசித்தேன்.

நாம் எத்தனை தடவை ஜெயித்தாலும் தோற்றதை மட்டும்தான் பேசுகிற உலகம் இது. அப்படி பயந்துகொண்டே இருந்தோம் என்றால் புதிய விஷயம் பண்ண முடியாது. இறங்கி அடித்துவிட வேண்டும் என்றுதான் நலன் கூட இணைந்தேன்.

புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என அவ்வளவு பெயரை எம்.ஜி.ஆருக்கு மக்கள் வைத்துள்ளார்கள். அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது. அவர் வாழ்க்கையில் சந்திக்காத கஷ்டம் கிடையாது.

அவர் தமிழ் சினிமாவை மாற்றி உள்ளார். அரசியலை மாற்றியுள்ளார். மக்களை மாற்றி உள்ளார். வாழ்க்கையே மக்கள் பணியாக இருக்க வேண்டும் என செயல்பட்டார்.

மக்களுக்கு நன்மை செய்வதே என் வேலை என பணிபுரிந்தார். பக்தியுடன் எம்.ஜி.ஆர். கேரக்டரை நான் பண்ணியிருக்கிறேன். இந்த படம் எனக்கு புது அனுபவம் நமக்கு சூப்பர் ஹீரோவாக வந்தவர் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பில் கிருத்தி ஷெட்டி நான் உங்களுடைய ரசிகை என சொல்லி என்னை வெட்கப்பட வைத்து விடுவார்.

படப்பிடிப்பில், நலன் ஆக்சன் சொல்லும்போது எம்.ஜி.ஆரிடம் நீங்களே என் மனதிற்குள் இருந்து நடித்து விடுங்கள் என அவரிடம் வேண்டிக் கொள்வேன். எம்.ஜி.ஆர். ஆசிர்வாதத்துடன் படம் நிச்சயம் வெற்றி பெறும்’ என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

dinesh kumar

Recent Posts

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…

7 hours ago

‘அந்நியன்’ போல நடந்த காதலரால் மன உளைச்சல்; காதல் தோல்வி குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…

8 hours ago

‘சிவாஜி’ படப்பிடிப்பில் ரஜினி அளித்த அன்பான வரவேற்பு – ஸ்ரேயா சரண் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…

9 hours ago

நீயெல்லாம் ஒரு ஆக்டரா? – ப்ரீத்தி முகுந்தன் குறித்து அசோக் செல்வன் கலகலப்பு!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…

9 hours ago

சென்னை ஆடம்பர வீட்டைவிட மும்பையின் 1,700 சதுர அடி வீடுதான் மகிழ்ச்சி – சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…

11 hours ago

துல்கர் சல்மானின் ‘I’M GAME’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…

11 hours ago