jiivi part 2 coming soon
விஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜீவி’. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் வெற்றியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன. இதனிடையே, ஜீவி படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், ஜீவி படத்தின் நாயகன் வெற்றி, இதுகுறித்த தகவலை டுவிட்டரில் ரீ-டுவிட் செய்துள்ளார். இதன்மூலம் ஜீவி இரண்டாம் பாகம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஜீவி முதல் பாகத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ் தான் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதியுள்ளாராம்.
நடிகர் வெற்றி, இயக்குனர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…