Vijay Sethupathi film withdrawn from OTT release
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘கடைசி விவசாயி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டு இருந்த படக்குழு, இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் ஓடிடி முடிவை கைவிட்டுள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…