‘Jananayakan’ music launch: AI photos go viral on the internet
‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: இணையத்தில் வைரலான ஏஐ புகைப்படங்கள்
விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமன்றி விஜய்யின் நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழா தொடங்கப்பட்ட உடனே விழா அரங்கில் இருந்து பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டது.
இந்த புகைப்படங்கள் வைரலாவதை முன்வைத்து, போலியாக ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களும் வெளியானது. இதையும் பலர் உண்மை என நினைத்து பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பின்பு, பலரும் இது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என தெரிவித்து நீக்கச் சொன்னார்கள்.
அந்த புகைப்படங்கள் அனைத்துமே பார்ப்பதற்கு நிஜம் போலவே இருந்ததால், பலரும் அவை உண்மை என நம்பத் தொடங்கியதால் இப்பிரச்சினை உருவானது. சில திரையுலக பிரபலங்களும் அந்த புகைப்படங்களை உண்மை என நினைத்து தங்களுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை காண முடிந்தது. சில மணித்துளிகளில் படக்குழுவினர், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவை விழா மேடைகளில் இருந்து நிஜமான புகைப்படங்களை வெளியிடத் தொடங்கினார்கள். பின்பு ஏஐ தொழில்நுட்ப புகைப்படங்களைப் பகிர்வது குறையத் தொடங்கியது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…