jananayagan movie first single update
ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கும் இந்த படத்தை KVN புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
மேலும் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ,நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் குடியரசு தினத்தன்று வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. தற்போது இந்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
அதில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது விஜயின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…