jailer-movie latest update
அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது நடிக்க தயாராக கொண்டிருக்கும் படம் தான் ஜெய்லர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கு உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இப்படத்திற்கான டெஸ்ட் படப்பிடிப்பு சமீபத்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒரு சிலர் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை இயக்குனர் நெல்சன் கொடுத்துள்ளார்.
அதில் அவர் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…