jailer-movie-latest-update
இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பிஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குனராக திகழும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலமொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றன. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றிய பிரபல ஸ்டண்ட் கலைஞர் சிவா கொடுத்திருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது.
அதில் அவர், ஜெய்லர் திரைப்படத்தின் அவுட் புட் நன்றாக வந்துள்ளது, இதில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தின் கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும். படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி படமாக மாறும் என அதில் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த அருமையான தகவல் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…