jailer-movie latest update
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிக்க தயாராகி இருக்கும் படம் தான் ஜெயிலர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்த அதிகாரிவபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. பொதுவாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்கள் படங்களில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களை முதலிலேயே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள். ஆனால் ஜெயிலர் படத்தின் நடிகர்கள் பட்டியலை இதுவரை சன் பிக்சர்ஸ் வெளியிடவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால் தற்போது இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதை அவரே உறுதி செய்துள்ளார். அதாவது இது குறித்து சமீபத்தில் பேசிய ரம்யா கிருஷ்ணன் நான் ரஜினிகாந்த்துடன் மீண்டும் நடிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படையப்பா படத்தில் நீலாம்பரி யாக ரஜினியுடன் இணைந்து நடித்த ரம்யா கிருஷ்ணன் மீண்டும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினியுடன் இப்படத்தில் நடிக்க இருப்பதால் இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…