'Jailer 2' - Famous actress who has started shooting for a special song?
‘ஜெயிலர் 2’ – சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இந்தி நடிகை நோரா பதேஹி, ஒரு பாடலுக்கு ஆடுகிறார். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ‘காவாலா’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். அந்தப் பாடல் வைரலானது. இதையடுத்து ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே, ‘மோனிகா’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். அந்தப் பாடலும் ஹிட்டானது.
இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நோரா பதேஹி இணைந்துள்ளார். அவர் தொடர்பான பாடல் காட்சி சென்னை அருகே செட் அமைத்து நடந்து வருகிறது. 8 நாட்கள் அவருக்கான படப்பிடிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஜெயிலர்-2 படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரும் இணைகின்றனர். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது.
விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து! கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்,…
'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’…
‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சிறந்த நடிப்பை…
மக்களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச்…
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக…
Minnu Vattaam Poochi Lyric Video | Sirai | Vikram Prabhu | LK Akshay Kumar |…