Jai Bhim enters Oscar race
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும்.
டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றிப்பெற்ற ஜெய்பீம் திரைப்படம், 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர்’ ஆகிய இரண்டு இந்திய திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில் இறுதிப்பட்டியல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…