கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 100 நாட்களுக்கு மேலாக மூடிக்கிடப்பதையடுத்து திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி நேரடியாக இணைய தளத்தில் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளிவந்தன. அடுத்து மேலும் பல படங்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாக தயாராகி வருகின்றன.
அந்தவகையில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை, டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும், தனுசும் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்குமானால் இணைய தளத்தில் தாராளமாக ரிலீஸ் செய்யலாம் என்று ஒப்புதல் அளித்து விட்டதாகவும் செய்திகள் பரவின.
இந்நிலையில், அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜெகமே தந்திரம் படத்தில் தனுசுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில்…
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு…
தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதி நாட்களில் புதிய திரைப்படங்களை காலை 6 மணி முதல் திரையிடவும், அதிகாலை 2.30…
Dayangaram Official Teaser | VJ Siddhu | Siddhu Kumar | Dr. Ishari K Ganesh |…
O Mysaa Re Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy|…
John Doe Official Trailer | Arjun Das, Sanchana Natarajan | Madhumita | Arka Mediaworks |…