ஜகமே தந்திரம் திரை விமர்சனம்

மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன ரவுடிசமும் செய்து வருகிறார். இதேசமயம் லண்டனில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ் என்ற இரண்டு மாபியா கும்பல் சண்டை போட்டு வருகிறார்கள்.

அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக ஜோஜு ஜார்ஜை அழிக்க, ஜேம்ஸ் காஸ்மோ கும்பலிடம் இணைந்து வேலை பார்க்க மதுரையில் இருந்து லண்டன் செல்கிறார் தனுஷ். அங்கு ஜோஜு ஜார்ஜிடமும் மறைமுகமாக டீல் பேசி வரும் தனுஷ், ஒரு கட்டத்தில் அவருக்கு துரோகம் செய்து அவரை கொல்வதற்கும் காரணமாகிறார்.

அதன் பின் லண்டனில் லிட்டில் மதுரை என்று உருவாக்கி பரோட்டா கடை வைத்து ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் கொல்லப்பட்ட ஜோஜு ஜார்ஜின் ஆட்களான கலையரசன் உள்ளிட்ட சிலர் தனுஷை துப்பாக்கியால் சுட்டு விடுகின்றனர்.

தனுஷ் சுடப்படுவதற்கு காரணமாக ஐஸ்வர்யா லட்சுமி செயல்படுகிறார். இறுதியில் தனுஷ் உயிர் பிழைத்தாரா? ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு எதிராக செயல்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ், தனக்கே உரிய நக்கல், நையாண்டி என்று நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பல காட்சிகளை சாதாரணமாக நடித்து அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். தனுஷின் உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல் ஆகியவை ரசிக்க வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, நடிப்பதற்கான அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் அதைப் புரிந்துகொண்டு சிறப்பாகவே நடித்திருக்கிறார். பிளாஷ்பேக் சொல்லும் காட்சியில் பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்திருக்கிறார்.

பீட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜேம்ஸ் காஸ்மோ, சிவதாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கதைக்கு சிறந்த தேர்வு. சிவதாஸ் அடியாளாக வரும் கலையரசன், தனுஷின் நண்பராக வரும் சௌந்தர ராஜா, சரத் ரவி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கவனிக்க வைத்திருக்கிறார்கள். தனுஷின் அம்மாவாக வரும் வடிவுக்கரசி அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து அதில் ஈழத்தமிழர்கள், அரசியல், காதல் என படத்தை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சிவதாஸ் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் காட்சிகளை சேர்த்திருக்கலாம்.

படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. பல காட்சிகளை இவருடைய இசை தாங்கிப் பிடித்து இருக்கிறது. குறிப்பாக தனுஷ் துப்பாக்கி எடுத்து வரும் காட்சியில் பின்னணி இசை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா, மதுரை மண்ணின் அழகையும், லண்டன் அழகையும் மாறாமல் படம் பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஜகமே தந்திரம்’ ஜகஜால கில்லாடி.

Suresh

Recent Posts

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

12 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

12 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

19 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

19 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

20 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

20 hours ago