சொல்லாத விஷயங்களுக்காக கேலி செய்யப்படுவது வருத்தமளிக்கிறது – நடிகை ராஷ்மிகா வேதனை

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஒரு சில விஷயங்கள் என்னை சில நாட்களாக, சில மாதங்களாக ஏன், சில வருடங்களாக மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இதுபற்றி வெளிப்படையாகப் பேச வேண்டிய தருணம் இது என்று நினைக்கிறன். இதில் நான் என்னைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளைப் பெற்று வருகிறேன். நிறைய ட்ரோல்களால், நெகட்டிவான விமர்சனங்களால் தாக்கப்படுபவராகவே நான் இருந்து வருகிறேன். இதுபோன்றவற்றை சந்திக்கக்கூடிய ஒரு துறையைதான் நான் என் வாழ்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் எல்லோராலும் நேசிக்கப்படும் ஒருவராக இருக்க முடியாது என்பது தெரியும். அதற்காக எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவது சரியில்ல. எல்லோரையும் எப்படி மகிழ்விப்பது என்பதுதான் எனது தினசரி சிந்தனையாக இருக்கிறது.

உண்மையில், என்னை மட்டுமல்ல நம் அனைவரையும் பெருமைப்படுத்துவதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். ஆனால், சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வரும் பொய்யான தகவல்களையும், குறிப்பாக நேர்காணல்களில் நான் சொல்லாத விஷயங்களுக்காக நான் கேலி செய்யப்படுவது என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறது.

என்னைப்பற்றிய விமர்சனங்கள் அர்த்தமுள்ளதாக இருந்தால் நான் அவற்றை வரவேற்கிறேன், ஏனென்றால் அவை என்னை மேம்படுத்த உதவுகின்றன. என்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து எனக்கு அன்பு கிடைக்கிறது. உங்களுக்காக நான் கடினமாகவும் சிறப்பாகவும் உழைப்பேன். ஏனென்றால் உங்களை மகிழ்விப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Suresh

Recent Posts

அண்ணாமலை கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் விஜயா மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…

44 minutes ago

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

21 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

21 hours ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

23 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

23 hours ago