தலைவர் 173 கதை இதுதானா? லீக்கான தகவல்!

தலைவர் 173 கதை இதுதானா? லீக்கான தகவல்!தலைவர் 173 கதை இதுதானா? லீக்கான தகவல்!

 

தலைவர் 173 படத்தின் கதைகளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் சுந்தர் சி அறிக்கையின் மூலம் படத்திலிருந்து விளகுவதாக அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல இயக்குனர்களின் பெயர் அடிபட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது இயக்குனரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கப் போவதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சூப்பர் ஸ்டார் ஒரு காலத்தில் ஒரு பயங்கரமான போலீஸ் அதிகாரியாகவோ அல்லது ஒரு தாதாவாகவோ இருந்தவர் அவர் அந்த வன்முறை நிறைந்த வாழ்க்கையை துறந்து ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையை உருவாக்க முற்பட்டு வருகிறார் அப்போது போஸ்டரில் குறியீடாக காட்டப்பட்டுள்ள தனது தையல் கருவிகளை பயன்படுத்தி அவர் தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து காப்பாற்ற யாராலும் தடுக்க முடியாத ஒரு குடும்ப நாயகனாக மாறுகிறார்.

இந்த தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்த்தை அதிகரிக்க செய்துள்ளது.

Is this the story of Chairman 173? Leaked information!

 

dinesh kumar

Recent Posts

Niram Tamil Movie Trailer

Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…

3 hours ago

Ramayana Tamil Trailer

Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman

3 hours ago

Ekavali Lyrical Video

Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…

3 hours ago

Kalavaadum Kanna Video Song

Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…

3 hours ago

தனுஷ் அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியல் மாறுமா? ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் பரபரப்பு கணிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…

5 hours ago

“மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம்” – பொதுமக்களுக்கு இளையராஜா அழைப்பு

இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…

5 hours ago