Is the engagement of Nayanthara and Vignesh Shivan over
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலர் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்களை விட 80களில் உள்ள பிரபலங்கள் சிலர் கூட நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்துள்ளார்கள். அப்படி விரைவில் திருமணம் செய்ய இருப்பவர்கள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா.
விக்னேஷ் சிவனின் நானும் ரவுடிதான் படத்தின் போது நயன்தாராவுடன் அவருக்கு காதல் ஏற்பட இன்னும் அவர்களது காதல் தொடர்ந்து வருகிறது.
அவர்களின் திருமணம் எப்போது என்று கேட்காத ரசிகர்களே இல்லை. அவர்களோ திருமணத்தின் போது கண்டிப்பாக அறிவிப்போம், ஆனால் இப்போது தங்களது வேலைகளில் தான் இருவருக்கும் கவனம் அதிகமாக உள்ளது என்று கூறி வந்தனர்.
இருவரும் இணைந்து எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாகிவிடும். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதில் நயன்தாரா கையில் மோதிரம் அணிந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அவர் இதுவரை இப்படி ஒரு புகைப்படம் பதிவு செய்தது இல்லை, எனவே இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…