Is Siruthai Siva writing the dialogues for Ajith's upcoming film directed by Aadhik!!
ஆதிக் இயக்கத்தில் அஜித் படிக்கும் படத்திற்கு, சிறுத்தை சிவா வசனம் எழுதுகிறாரா!!
அஜித் தற்போது மலேசியா கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். இந்நிலையில், அங்கு அஜித்தை, இயக்குநர் சிறுத்தை சிவா சந்தித்துள்ளார். மலேசியாவில் அஜித் மற்றும் சிவா சந்தித்துக்கொண்ட நிகழ்வு அஜித் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.
அஜித்தின் அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. AK64 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் வெளியாகவும் இருப்பதாக திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன் பிறகு அஜித்தின் AK65 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கும் வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் உறுதியாகவில்லை.
இதற்கிடையில், அஜித்தை திடீரென சிவா சந்தித்திருக்கிறார். ஒருவேளை AK65 படத்தை சிவா இயக்கபோகிறாரோ? என சில ரசிகர்கள் கருத்து பதிவிடுகுன்றனர். இவர்களது கூட்டணியில் உருவான வீரம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது நினைவுகூரத்தக்கது.
இச்சூழலில், கங்குவா படத்திற்கு பிறகு சிவா தனது அடுத்த பட அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. சில நடிகர்களை சந்தித்து சிவா கதை சொல்லி இருப்பதாக தெரிகின்றது. விஜய் சேதுபதி நடிப்பில் சிவா தனது அடுத்த படத்தை இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில், அஜித் மற்றும் சிவா எதார்த்தமாகவே சந்தித்துக் கொண்டதாகவே தெரிகின்றது. நட்பாக இந்த சந்திப்பு நடந்ததே தவிர, இது தொழில்முறை சந்திப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஒரு சிலர், AK64 படத்திற்கு சிவா வசனம் எழுதினால் நன்றாக இருக்கும். அவர் படங்களில் எப்போதும் வசனங்கள் தெறிகக்கும். எனவே அவரின் வசனத்தில் AK64 படம் உருவானால் நன்றாக இருக்கும் எனவும் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…