Is 'Idi Muzhakkam' a remake movie - Director Seenu Ramasamy
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார்.
மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே இடிமுழக்கம் படம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான லட்சியம் படத்தின் ரீமேக் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “இடிமுழக்கம் ரீமேக் படமல்ல. நானறிந்த தமிழ் சமூகத்தில் அன்றாடம் நடந்தேறும் பரப்பரப்பான கதை. இதற்கு நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து உரையாடல் எழுதியுள்ளோம். இடம் பொருள் ஏவல் படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். நன்றி” என தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…