Iravin Nizhal Movie Box Office Collection Update
ஒத்த செருப்பு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க அகிரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த இரவின் நிழல் என பார்த்திபன் பல்வேறு பேட்டிகளில் கூறியிருந்தார்.
இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஜூலை 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு மட்டுமின்றி தமிழகத்தில் மட்டும் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் இப்படத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதால் விரைவில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற இந்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…