information about the damage to the varisu audio launch
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.
தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல வெளியாகி இணையதளத்தை ஆக்கிரமித்து இருந்தது.
இந்நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் அதிகப்படியான இருக்கைகள் சேதம் அடைந்திருப்பதாக நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சேதம் குறித்த கணக்கெடுப்புக்கு பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…