I'm not without you - Simbu
நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்பு, தனது அடுத்த இன்னிங்சை தொடங்கிவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான்-சிம்பு கூட்டணி 3-வது முறையாக இந்த படத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை, நடிகர் சிம்புவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் , “மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பி விட்டேன். தற்போது மெல்ல குணமடைந்து வருகிறேன். எனக்காக பிராத்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்க இல்லாமல் நான் இல்லை” என தெரிவித்துள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…