Ilayaraja asked for 5 crore Compensation Producer explanation of Good Bad Ugly
அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தற்போது இசை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களான ‘ஒத்த ரூவாய் தாரேன்’, ‘இளமை இதோ இதோ’, மற்றும் ‘என் ஜோடி மஞ்ச குருவி’ போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு இசைஞானி இளையராஜா 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ரவி சங்கர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “இந்த பாடல்களைப் பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து முறையான அனுமதிகளையும் நாங்கள் பெற்றுள்ளோம். சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்களுக்கு உரிய தொகையை செலுத்தி, தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளோம். இதுவரை இளையராஜாவிடமிருந்து எங்களுக்கு எந்தவிதமான நோட்டீசும் வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தற்போது வந்துள்ள இந்த நோட்டீஸை எங்கள் சட்டக்குழு சந்தித்து, உரிய முறையில் பதிலளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…