idly kadai movie review
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த இட்லி கடை ஊரின் அடையாளமாக இருக்கிறது. ஆனால், தனுஷுக்கு கிராமத்தில் வாழ விருப்பம் இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்கிறார். வெளிநாட்டில் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் சத்யராஜ் மகள் ஷாலினி பாண்டேவுக்கும் தனுஷுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தனுஷின் தந்தை ராஜ்கிரனும் தாய் கீதா கைலாசமும் இறக்கிறார்கள். கிராமத்திற்கு திரும்பி வரும் தனுஷ், வெளிநாட்டிற்கு செல்ல மறுக்கிறார். மேலும் ராஜ்கிரண் நடத்தி வந்த இட்லி கடையை நடத்த முடிவு செய்கிறார். இவரது இந்த முடிவால், தனுஷ், ஷாலினி பாண்டே திருமணம் நின்று விடுகிறது. இதனால் கோபமடையும் ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய், கிராமத்திற்கு வந்து தனுஷுடன் சண்டை போடுகிறார். அதே சமயம் இட்லி கடைக்கு எதிரே பரோட்டா கடை நடத்தி வரும் சமுத்திரக்கனி தொழில் போட்டியால் தனுஷை ஒழிக்க நினைக்கிறார். இறுதியில் தனுஷ் இட்லி கடையை தொடர்ந்து நடத்தினாரா? அருண் விஜய் தனுஷை என்ன செய்தார்? சமுத்திரக்கனியின் திட்டம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பா, அம்மாவை நினைத்து வருந்தும் காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார். இட்லி கடை எப்படியாவது நடத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், தனுஷுக்கு உறுதுணையாக படம் முழுக்க பயணித்து ஸ்கோர் செய்து இருக்கிறார். இவரது வெகுளித்தனமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அருண் விஜய் மிகவும் கோபக்காரனாகவும், ஈகோ உள்ளவராகவும் கம்பீரத்துடன் நடித்து இருக்கிறார். ராஜ்கிரண், சத்யராஜ், கீதா கைலாசம், இளவரசு ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் பார்த்திபன் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சர்ப்ரைஸ் ஆன நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாலினி பாண்டே அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
நடிப்பு மட்டுமில்லாமல் படம் இயக்குவதிலும் தான் சிறந்தவன் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் தனுஷ். உண்மை கதையை கொஞ்சம் சினிமா ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் அம்மா, அப்பா பற்றி பேசும் காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக அமைந்து இருக்கிறது. வசனங்கள் மற்றும் கன்னுக்குட்டி காட்சிகள் சிறப்பு.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்து இருக்கிறது. பின்னணி இசையில் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை மண்மணம் மாறாமல் இருக்கிறது.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…