I Have No Intention of Entering Politics” – Actor Bala Reiterates His Stand
சின்னத்திரையில் காமெடியன், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து, தற்போது நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் பாலா. தனது வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சமூக நலப் பணிகளுக்காக செலவழித்து வரும் அவர், பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலாவிடம், “அரசியலுக்கு வருவீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பாலா, “எனக்கு அரசியல் அறிவு கிடையாது. அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. அந்த அளவுக்கு நான் பெரிய ஆளும் கிடையாது. என்னால் முடிந்தவரை நான் சம்பாதிக்கும் பணத்தின் மூலம் மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்று கூறினார்.
மேலும், “எனக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறேன். என் வாழ்நாளின் இறுதி வரை உழைத்து சம்பாதித்து, அந்த வருமானத்தின் மூலம் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்து என் பயணம் தொடரும்” எனத் தெரிவித்தார்.
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses
The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…