புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன் : கே.பாக்யராஜ் பேச்சு
பன்முகத்திறமையாளரான இயக்குநர் கே.பாக்யராஜ், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதையொட்டி, அவரது பிறந்தநாளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, கமல்ஹாசன் எம்.பி., நடிகர் பார்த்திபன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நடிகர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இச்சூழலில் பாக்யராஜ் கூறியதாவது:
திரைத்துறையில் 50 ஆண்டுகள் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ‘16 வயதினிலே’ படத்தில் எனக்கு முதல் முறையாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு தேடும் காலத்தில் பலரிடம் என்னுடைய உண்மையான பெயரைச் சொல்லாமல் கோவைராஜா என்று கெத்தாகச் சொல்லிக் கொள்வேன். ‘16 வயதினிலே’ படத்தில் தான் என் பெயரை பாக்யராஜ் என்று வைத்தேன்.
என்னுடைய அம்மா எனக்கு வைத்த பெயர் இதுதான். டைட்டில் கார்டில் பார்த்துவிட்டு, இது யார் பெயர் என்று இயக்குநர் பாரதிராஜா கேட்டார். பிறகுதான் அது நம்முடைய ராஜன் என்று சொன்னார்கள். அம்மாவின் பாக்கியத்தை இழந்து விடக்கூடாது என்பதால் கே.பாக்யராஜ் என்று வைத்துக் கொண்டேன்.‘
கிழக்கே போகும் ரயில்’ படத்தின்போது என்னுடைய இயக்குநர் எனக்குப் பிறகு ராஜன் தான் என்று சொன்னார். துணை இயக்குநர், வசனகர்த்தா,திரைக்கதை எழுத்தாளர், பின்பு நடிகர் என படிப்படியாக வந்தேன்.
எனது தாயார், `உன்னுடைய இயக்குநரே உன்னை கதாநாயகனாக வைத்து படம் எடுப்பார்’ என்று சொன்னார். அது உண்மையிலே நடந்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பு எனது தாயார் இறந்தது. வருத்தமாக இருந்தது.
ரஜினி சாரை ‘16 வயதினிலே’ படத்தில் பார்த்தேன். அன்று பார்த்ததுபோல இன்றும் இருக்கிறார். சினிமாவில் 50 வருடங்கள் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அடுத்ததாக ஒரு வெப் தொடரும், ஒரு படமும் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்’ என கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…